தனியார் நிறுவனமொன்றின் மீது துப்பாக்கிச் சூடு

வெலிக்கடை, பழைய கோட்டே வீதி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த நிறுவனத்தின் உரிமையாளரை அச்சுறுத்தும் நோக்கில் நிறுவனத்தின் குளியலறையின் ஜன்னல் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிப்பதுடன்விசாரணைகளையடுத்து சம்பவ இடத்திலிருந்து 9 மில்லிமீற்றர் ரக ரவையின் பகுதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்