தனியார் நிறுவனத்தில் பல மில்லியன் ரூபா மோசடி: இளம்பெண் கைது

களுத்துறையில் தனியார் நிறுவனமொன்றில் 4.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் காசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயாகல, ஹல்கந்தவில, துவகொட பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில்,

குறித்த பெண் பேருவளை, அம்பேபிட்டியகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் காசாளராக பணிபுரிந்து வரும் நிலையில் குறித்த வங்கியில் 4.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வங்கியின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்இ பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது 2023.06.09 முதல் 2024.02.06 வரை இந்த மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.