தனியார் நிறுவனத்தின் தவறை மறைக்க லஞ்சம் கேட்ட தொழில் திணைக்கள அதிகாரி கைது!

கல்கிசையில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து, 250,000 ரூபாயை லஞ்சமாக கேட்ட , தொழில் திணைக்கள அதிகாரி ஒருவர், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால், கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர், தொழில் திணைக்களத்தின் கொழும்பு மேற்கு மாவட்ட செயலக அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஆவார்.

தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 5000 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்றும், ஊழியர் சேமலாப நிதியை (EPF) அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது, எனினும் குறித்த தனியார் நிறுவனம், தொழிலாளர் சட்டங்களை மீறி செயற்பட்டு வந்துள்ளது.

இதனை அறிந்த சந்தேக நபரான தொழில் திணைக்கள அதிகாரி, குறித்த தனியார் நிறுவனத்தின் தொழிலாளர் சட்ட மீறல்களை மறைக்க, லஞ்சம் கேட்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க