தனியார் காணியொன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை

புத்தளம் – சாலியவெவ நீலபொம்ப கிராமத்தின் வீடு ஒன்றுக்கு அருகாமையில் உள்ள தனியார் காணியொன்றில் யானையொன்று நேற்று ஞாயிற்று கிழமை காலை உயிரிழந்துள்ளது.

25 வயது மதிக்கத்தக்க 8 முதல் 9 அடி உயரமும் இரண்டு அடி நீளம் கொண்ட கொம்பினையுடைய கொம்பு யானை ஒன்றே உயிரிழந்துள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

யானையின் உடற்கூறு பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய முடியும் எனவும் குறித்த கொம்பு யானையின் பிரேதப் பரிசோதனையை வடமேல் மாகாண வனஜீவராசித் திணைக்கள கால்நடை வைத்தியர் இசுரு ஹேவாகொட்டுகே மேற்கொள்ளவுள்ளதாகவும் கருலகஸ்வெவ வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் கூறினர்.

இந்த கொம்பு யானை எவ்வாறு உயிரிழந்தது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளுடன் சாலியவெவ பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் காணியொன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்