தனியார் காணியொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு

மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளியடி வெற்றிலைக்கேனி பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

தனியார் காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியினை துப்புரவு செய்த போது காணியில் புதையுண்ட நிலையில் கிடந்த கைக்குண்டுகளை அவதானித்து மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்தார்.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் அனுமதியினை பெற்ற பின்னர் குறித்த கைக்குண்டுகளை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.