
தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய கோரிக்கை?
தனியார் துறை ஊழியர்களை கடமைகளுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி, முடிந்தவரை வீட்டிலிருந்தே கடமைகளை இணைவழியில் முன்னெடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நிறுவன தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், எதிர்வரும் 23ஆம் திகதி பெற்றோல் கப்பலொன்றையும், 24ஆம் திகதி டீசல் கப்பலொன்றையும் நாட்டுக்கு வரவழைப்பதற்கு நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அத்தியாவசிய சேவைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
