தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா

ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சமூக ஊடகங்களில் மக்கள் கூட்டம் இல்லாத தேர்தல் பிரசாரம் தொடர்பான காணொளி ஒன்று பரவியதற்கு தனது பிரச்சார முயற்சிகள் உண்மையானவை என பதிலளித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில், தனது பொது பேரணிக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், மது அல்லது சாப்பாடு கொடுத்து மக்களை பேருந்துகளில் அழைத்து வரவில்லை என்றும் கூறினார்.

மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்கு முந்தைய நாள் இரவு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகளை பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

எனது பொதுக்கூட்டத்தில் ஒரு நபராக இருந்தாலும், ஐந்து, பத்து, ஐம்பது பேர் அல்லது நூறு பேர் கலந்து கொண்டாலும், எனது விசுவாசமான கட்சி ஆதரவாளர்கள் என்பதால் 1000 பேரை விட, அவர்கள் எனக்கு முக்கியமானவர்கள்,” என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் பரவிவரும் தனது தேர்தல் பேரணியின் காணொளி பொதுமக்களின் அரசியல் அறிவாற்றலை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்