
தனிமையில் வசித்து வந்த பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு
-யாழ் நிருபர்-
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 70 வயதுடைய வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் திருமணம் செய்யாமல் தனியார் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழப்பதற்கு முன்னர் அவர் ஒரு கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
