
தனிநபர் புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை
தனிநபரின் புகைப்படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 3 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சமூக வலைதளப்பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை பெருநகர பொலிஸாரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில், “அனுமதியின்றி தனிநபரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் அல்லது 3 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
அத்துடன், இணையதளங்களில் தனியுரிமையினை மதிக்கவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
