தனது குழந்தையை பணி பெண்ணுடன் விட்டு செல்ல முயன்ற சீன பெண்

தன்னுடைய பெண் பிள்ளையை இதுவரை காலமும் கவனித்துக்கொண்ட இலங்கை பெண்ணிடம் கொடுத்துவிட்டு தப்பியோடுவதற்கு முயன்ற சீனப் பெண் நேற்று செவ்வாய் கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

35 வயதான இந்த பெண் தன்னுடைய 58 வயதான தாயுடன் டுபாயில் வாடகை வீடொன்றில் வசித்து வந்ததுடன் பிரபலமான விடுதிகளில் நடனமாடும் நடனக் கலைஞராக இருந்துள்ளார்.

இவருக்கு மூன்று மற்றும் ஆறு வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்துள்ளனர். இவர்கள் தன்னுடைய சீனத் தாயை விட இலங்கையிலிருந்து பணி பெண்ணாக சென்றவரை அதிகமாக நேசித்ததால் தம்மைப் பராமரிக்கும் இலங்கைப் பணிப்பெண்ணிடம் அவ்விரு பிள்ளைகளும் மிகுந்த பாசம் காட்டியுள்ளனர்.

குருநாகல் பொல்கஹவெல பொத்துஹெரவில் வசிக்கும் 53 வயதுடைய இந்த பணிப்பெண் தனது சேவையை முடித்துக்கொண்டு அண்மையில் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.

பணிப்பெண்ணின் பிரிவால் அவ்விரு பிள்ளைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் அக்கம் பக்கத்தினர் தெரிந்து கொள்ளாத வகையில் அந்த சீனப்பெண் நடந்துகொண்டுள்ளார்.

இதேவேளை இது தொடர்பில் எதனையும் கூறாத சீனப் பெண் இலங்கை பணிப்பெண்ணுக்கு அழைப்பை எடுத்து தான் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள வருகைதர உள்ளதாகவும், தங்களை அழைத்துச் செல்ல கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தருமாறும் அழைத்துள்ளார்.