
தனது கணவரை மட்டையால் தாக்கி கொலை செய்த பெண் கைது
தனது கணவரை மட்டையால் தாக்கி கொலை செய்த பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் திஸ்ஸமஹாராம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் மனைவி தமது கணவரை மட்டையால் தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 47 வயதானவர் என்பதுடன், தாக்குதலை நடத்திய அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
