தனது கணவனை கொன்று புதைத்ததாக 33 வருடங்களின் பின்னர் ஒப்புக்கொண்ட மனைவி

ஊருபொக்க பிரதேசத்தில் 33 வருடங்களுக்கு முன்னர் தனது கணவரை கொலை செய்ததை ஏற்றுக்கொண்ட தாய் மீது மகன் முறைப்பாடு செய்துள்ளார்.

தற்போது வலதுகுறைந்துள்ள தாய், “நான் செய்தது பாவம்” என தனது சொந்த சகோதரியிடம் கூறி கொலையை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதற்கமைய, அவரது மகன் தனது தாயும் தாயின் சட்டரீதியற்ற கணவரும் இணைந்து தனது தந்தையை கொலை செய்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தததுடன்இ தனது தந்தை கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கழிவறை குழியையும் அவர் பொலிஸ் அதிகாரிகளிடம் அடையாளம் காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து, ஊருபொக்க பொலிஸார், நீதிமன்றில் அறிவித்துள்ளதோடு, உடல் எச்சங்கள் இன்று திங்கட்கிழமை நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்