தனது ஆண் உறுப்பை அறுத்து மேசையில் வைத்துவிட்டு இளைஞன் தவறான முடிவு

தனது ஆண் உறுப்பை அறுத்து மேசையில் வைத்த இளைஞன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஹபரணை ரயில் நிலையம் – திருகோணமலை வீதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முந்திய நாள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சென்றவர் சில சமயங்களில் சுயநினைவின்றி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாறான உடல் நிலை காரணமாகவே குறித்த நபர் சிகிச்சை பெற்று வந்ததாக உயிரிழந்தவரின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞன் தனது பெற்றோருடன் வசிக்கும் வீட்டை அண்டியுள்ள தனது சொந்த கடை அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்