
தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடளித்துள்ள பாடகர்!
தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பாடகர் எஸ்.பி.சரண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவரது வீட்டில் வாடகைக்குத் தங்கியிருக்கும் உதவி இயக்குநர் ஒருவர் கடந்த 23 மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை என பாடகர் சரண் தெரிவித்துள்ளார்.
வாடகைப் பணத்தைப் பெறுவதற்கு முற்படும் வேளைகளில் தன்னை தகாத வார்த்தைகளால் கதைத்து அவர் மிரட்டுவதாகப் பாடகர் சரண் குறிப்பிட்டுள்ளார்.