தந்தை மற்றும் மகள் மீது துப்பாக்கி சூடு
மீட்டியகொட மஹவத்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பாலிமுல்ல மீட்டியகொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய தந்தை மற்றும் 29 வயதுடைய மகள் ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் வந்த மூவர், வீட்டில் இருந்த குறித்த தந்தை மற்றும் மகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மீட்டியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்