தந்தை செல்வாவின் 116ஆவது ஜெயந்தி தின நிகழ்வு

-யாழ் நிருபர்-

தந்தை செல்வாவின் 126ஆவது ஜெயந்தி தின நிகழ்வு இன்று ஞாயிற்று கிழமை காலை 9.30 மணியளவில் தந்தை செல்வா நினைவிடத்தில் தென்னிந்தியத் திருச்சபையின் ஓய்வு பெற்ற பேராயர் ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது.

தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு தந்தை செல்வாவின் சதுர்க்கத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம், தமிழரசுக் கட்சியின் உப செயலாளர் குலநாயகம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.