தந்தையால் கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகள்: காரணம் என்ன?

அம்பாறை – பெரியநீலாவணை பகுதியில் தமது தந்தையால் வெட்டி கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் பிரேத பரிசோதனை இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

பாக்கியதுல் சாலியா பகுதியில் தமது மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த 63 வயதான தந்தை தமது உயிரையும் மாய்த்துக் கொள்ள முயற்சித்த நிலையில் தற்போது கல்முனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவத்தில் 29 வயதுடைய ஆணும் 15 வயதுடைய சிறுமியுமே கொல்லப்பட்டனர்.

இதேவேளை குறித்த இரண்டு பேரும் தங்களது வேலைகளை தாங்களே சரியாக செய்வார்கள் என அயலவர்கள் தெரிவித்த நிலையில் தம்மை தூங்க விடாமல் தொந்தரவு செய்தமையாலேயே தூக்க கலக்கத்தில் தமது பிள்ளைகளை கொலை செய்ததாகவும் தானும் உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்ததாகவும் தந்தை தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எது எவ்வாறாயினும் சம்பவத்துக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.