தண்ணீர் பிடிப்பதற்காக திடீரென பேருந்தை நிறுத்தியதால் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து

இந்தியாவில் திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டியில் அரசுப் பேருந்தின் பின்னால் மற்றொரு அரசுப் பேருந்தும் அதன் பின்னால் தனியார் பேருந்தும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.

முதலில் சென்ற அரசுப் பேருந்தின் சாரதி சாலையோர குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக பேருந்தை திடீரென நிறுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்