தண்ணீர் தொட்டிக்குள்ளிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு!
கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விட்டுச் செல்லப்பட்ட நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கியுடன் 29 தோட்டாக்களையும் கண்டுபிடித்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கைவிடப்பட்ட தண்ணீர் தொட்டியில் இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
