
தண்டவாளங்களுக்கு இடையே சிக்கிய பெண்ணின் சாமர்த்தியம்: வைரலாகும் காணொளி
இந்தியாவில் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே பெண்ணின் கால் சிக்கிக் கொண்ட நிலையில் சாதூர்யமாக செயல்பட்ட பெண் உயிர் தப்பியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் விகாராபத் மாவட்டத்தில் உள்ளது நவான்ஹி ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது அவருடைய ஒரு கால் தண்டவாளங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது.
குறித்த பெண் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட காலை எடுக்க முயற்சி செய்த நேரத்தில் அந்த வழியாக சரக்கு ரயில் ஒன்று வந்ததையடுத்து சாமர்த்தியமாக சிந்தித்த பெண் தண்டவாளங்களுக்கு இடையே படுத்துக்கொண்டார்.
இந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
