தண்டவாளங்களுக்கு இடையில் சிக்கிய சடலத்தால் ரயில் போக்குவரத்துக்கு தடங்கல்

மொனராகலையில் ரயிலில் மோதுண்ட நபரின் சடலம், இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில் சிக்கியதால், கரையோர ரயில் சேவைகள் சில மணிநேரம் தாமதமடைந்தன என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மகொன பிரதேசத்தில் காலியில் இருந்து கல்கிஸை வரைக்கும் பயணித்த 8319 என்ற இலக்கத்தைக் கொண்ட ரயிலுடன் நபரொருவர் மோதியுள்ள நிலையில் அவருடைய சடலம் இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை என கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

இதனால், ருகுணு குமார் மற்றும் காலி குமாரி விரைவு ரயில்கள் முறையே 35 மற்றும் 30 நிமிடங்கள் தாமதமாகின என களுத்துறை ரயில்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிரமங்களுக்கு மத்தியில் மீட்கப்பட்ட சடலம், பயாகல ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பயாகல பொலிஸார் ​மேற்கொண்டு வருகின்றனர்.