தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பால் பல உணவகங்களுக்கு பூட்டு

நாடு முழுவதும் உள்ள 30,000 உணவகங்களில் 10,000 உயவகங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

ரொட்டி மா, முட்டை, இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றின் பாரிய விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரச நிறுவனங்களின் உணவகங்கள் மற்றும் பாடசாலை உணவகங்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக அவர் தெரிவித்தார்.