தடைப்பட்ட வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியது
-பதுளை நிருபர்-
மடுல்சீமையில் இருந்து பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான வீதியில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
பதுளை – மடுல்சீமையில் இருந்து பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய வரை செல்லும் பிரதான வீதியில் குருவிக்கொல்ல பகுதியில் நேற்று புதன்கிழமை பாரிய மண்மேடு சரிந்து வீதியில் வீழ்ந்தமையினால் அவ்வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்ததாக மடுல்சீமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த வீதியில் சரிந்து விழுந்த மண்மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டதனை தொடர்ந்து தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்