தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்

தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை, தாய்லாந்து நீக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி தாய்லாந்தில் கஞ்சா செடிகளை வீடுகளிலும் வளர்த்து விற்பனை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவணை மற்றும் வர்த்தகத்திற்கு கடுமையான சட்டங்கள் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் முதலாவது நாடாக தாய்லாந்து விளங்குகின்றது.

எனினும், நாட்டின் வருமானத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறை மற்றும் விவசாயம் என்பனவற்றை மேம்படுத்துவதற்காக இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயினும், கேளிக்கை மற்றும் பொழுது போக்கு நிகழ்வுகளில் கஞ்சா பாவனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.