
தங்க விலையில் புதிய வரலாறு
உலக சந்தையில் முதன் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலரைக் கடந்துள்ளது.
அதிகரித்துவரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் தங்கத்தின் மீதான கணிசமான முதலீடு காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த ஆண்டின் இறுதியில், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 5,500 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
