தங்க பிஸ்கட்களுடன் விமான நிலைய ஊழியர் கைது

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர் ஒருவர் தங்க பிஸ்கட்களை கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் 54 வயதான ஊழியர் ஒருவர் ஆவார்.

அவரது காலுறையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 210 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான 5.94 கிலோ கிராம் எடையுள்ள 24 கரட் தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.