தங்க நகைகளை திருடிய சந்தேக நபர் கைது
-மஸ்கெலியா நிருபர்-
ஹட்டன் பிரதேசத்தில் 9 இலட்சம் ரூபாவிற்க்கு மேல் பெறுமதியான தங்க நகைகளை திருடிய சந்தேக நபர் ஒருவர் கைது.
ஹட்டன் நகரில் உள்ள வீடொன்றினுள் புகுந்து 9,62,500 ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிய 36 வயதுடைய நபர் ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் யூனிஃபீல்ட் தோட்டம், கே.ஜி.கே பிரிவைச் சேர்ந்தவராவார்.
ஹட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுகததாசவுக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சந்தேக நபர் பெப்ரவரி 11 ம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்பட்ட போது, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளது.
