தங்கையை 2 ஆண்டுகள் சீரழித்த அண்ணன்!

இந்தியாவில் ராஜஸ்தான், சுரூ மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண் பெரியப்பா மகனினால் பாலியல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அண்ணன் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அதேபோல், வழக்கம்போல சகோதரி வீட்டிற்கு சென்ற நிலையில், அவர் தனிமையில் இருந்ததை தெரிந்து கொண்டு, பலவந்தமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

மேலும், அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். அதனை வைத்து மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

2 வருடமாக இது தொடர்ந்து வந்த நிலையில், பெண் மனமுடைந்து சோர்ந்து காணப்பட்டுள்ளார்.

அதனை கண்டு பெற்றோர் விசாரித்ததில் அண்ணனால் தனக்கு ஏற்பட்ட கொடுமையை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே இதுகுறித்து பொலிஸாரிடம் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.