தங்காலை படகு விபத்து – மேலும் ஒருவரின் சடலம் மீட்பு

தங்காலை – பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்ற பல நாள் மீன்பிடி படகு, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மற்றுமொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்காலையைச் சேர்ந்த 49 வயதுடைய சமிந்த ருவன் ஜனக என்பவரின் உடலே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தங்காலை – பரவிவெல்ல துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற பல நாள் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் நால்வர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், இருவர் காணாமல் போயிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 29 ஆம் திகதி விமானப்படையின் உதவியுடன் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, மீனவரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.