தங்காலையில் ஜேர்மன் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
தங்காலை சீனிமோதர பிரதேசத்தில் கடலில் குளித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சுற்றுலா பயணி அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாகவும், அருகில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் அவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 49 வயதுடைய ஜேர்மன் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்