தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிப்பு!
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.
பாதுகாப்புப் புகலிடமாக முதலீட்டாளர்கள் தங்கத்தைத் தெரிவு செய்வதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,493.79 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 69.77 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
