தங்கம் கடத்த முயன்ற 5 பேர் கைது
-மன்னார் நிருபர்-
மன்னார் – ஒழுதுடுவை பகுதியில் சட்ட விரோதமாக 2.15 கிலோகிராம் தங்கத்தை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்காலை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 28 முதல் 56 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது பயன்படுத்தப்பட்ட படகு, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வாகனங்களுடன் 5 சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறையில் உள்ள சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்