
தங்கம் கடத்தல்: மூன்று இலங்கையர்கள் இந்தியாவில் கைது
தங்க கடத்தல் மோசடியில் ஈடுபட்ட மூன்று இலங்கை பிரஜைகள் இந்தியாவில் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்தியாவில் பெங்களூரு நகரிலுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் கொழும்பில் இருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற நிலையில் சுங்க அதிகாரிகளால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, ஆசனவாயிலில் தூள் போன்ற பொருட்களுடன் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1,670.92 கிராம் ஆகும். இதன் மொத்த இலங்கை மதிப்பு 42,528,927 ரூபாய் (11,900,000 இந்திய மதிப்பு) ஆகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
