தங்கப் பொதி மீட்பு

கல்பிட்டி தோராயடி களப்பு பகுதியிலிருந்து 4 கிலோகிராமுக்கு அதிக நிறையுடைய தங்கம் அடங்கிய பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினரின் விசேட தேடுதலின்போது குறித்த தங்கம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோராயடி கடற்கரைக்கு அருகில் தங்கக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்