தங்கத்தின் விலையில் தொடர்ந்து பாரிய வீழ்ச்சி!

உலக சந்தையில் இன்று திங்கட்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4687 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்தும் பாரியளவில் வீழ்ச்சி அடைந்து வருகின்றது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு பவுன் தங்கத்தின் விலை 12,000 ரூபாய் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, இன்றைய தினம் 22 கரட் ஒரு பவுன் தங்கம் 338,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அதேநேரம், 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, 368,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இது கடந்த வௌ்ளிக்கிழமை 380,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.