தங்கத்தின் இன்றைய விலை

தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறைவடைந்துள்ளது.

கொழும்பு – செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 22 கரட் தங்கம் 192,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,037 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை 24 கரட் தங்கம் 211,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 195,000 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.