ட்ரம்ப் – புட்டின் இடையேயான சந்திப்புக்கான இடம் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்-ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் சந்திப்பதற்கான இடம் உறுதிப்படுத்தப்பட்டதை வெள்ளை மாளிகை அதிகாரிகள் அறிவித்துள்ளனர் .
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள ஆங்கரேஜில் உள்ள அமெரிக்க இராணுவம் மற்றும் அமெரிக்க விமானப் படையின் ஒருங்கிணைந்த தளமான எல்மென்டார்ஃப்-ரிச்சர்ட்சன் கூட்டுத் தளத்தில் ட்ரம்ப்–புட்டின் இடையேயான சந்திப்பு நாளை வெள்ளிக்கிழமை (15)இடம்பெறவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் விவாதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
