ட்ரம்புக்கு எதிராக ஒபாமா வெளியிட்ட கருத்து

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் வரி குறைப்பு யோசனைக்குப் பின்பு, நிதி ஆதாரத்தைத் திரட்ட, Medicaid எனப்படும் மருத்துவ உதவிக்கான நிதியைக் குறைக்கும் யோசனையை ட்ரம்ப் அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த யோசனையை விமர்சித்து, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மருத்துவ உதவிக்கான நிதியைக் குறைத்து, மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தும் யோசனையை நிறைவேற்ற, ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் விரைந்து வருவதால், 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

மேலும், ட்ரம்ப்பின் இந்த யோசனை நிறைவேறினால், உழைக்கும் வர்க்க குடும்பங்களின் எதிர்கால தலைமுறைகளைக் கடுமையாகப் பாதிக்கும். அதனால், இன்றே உங்கள் பிரதிநிதியை அழைத்து, இந்த யோசனைக்கு எதிராக வாக்களிக்கச் சொல்லுங்கள் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.