ட்ரம்பின் வரிக் கொள்கையை தடுக்கக் கோரி 12 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு தாக்கல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கையைத் தடுக்கக் கோரி, சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 12 அமெரிக்க மாநிலங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன.

இவ்வாறு வரி விதிப்பது சட்டவிரோதமானது என்றும், நாட்டின் பொருளாதாரம் குழப்பகரமான ஓர் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இந்த வழக்கில் ஓரிகான், அரிசோனா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், இல்லினாய்ஸ், மைனே, மினசோட்டா, நெவாடா, நியூ மெக்ஸிகோ, நியூ யோர்க் மற்றும் வெர்மான்ட் ஆகிய மாநிலங்கள் வாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க