டோஹா தாக்குதல் வெற்றி பெறவில்லை – இஸ்ரேல் இராணுவம்

கடந்த செவ்வாய்க்கிழமை டோஹாவில் சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் காணாமல் போன இருவரைத் தொடர்ந்தும் தேடுவதாக கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மிகவும் சர்ச்சைக்குரிய தாக்குதல் வெற்றி பெறவில்லை என இஸ்ரேலிய இராணுவத் தரப்புதெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலின்போது பலியான, ஹமாஸ் கீழ் மட்ட உறுப்பினர்களில் மூன்று பேரின் உடல்களைக் கட்டார் உள்துறை அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

சம்பவத்தில் கட்டாரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.

எனினும், தமது சிரேஷ்ட பேச்சாளர் கலீல் அல் ஹய்யாவை படுகொலை செய்யும் இஸ்ரேலின் முயற்சி இந்தத் தாக்குதலின்போது தோல்வியடைந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.