டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்ட நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 04 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 80 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபாய் 40 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 396 ரூபாய் 58 சதம் ஆகவும் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325 ரூபாய் 51 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 339 ரூபாய் 20 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபாய் 77 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 62 சதம் ஆகவும் அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 206 ரூபாய் 31 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபாய் 02 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 232 ரூபாய் 51 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.