
டொலரின் இன்றைய பெறுமதி
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினமும் வெள்ளிக்கிழமை இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 315.56 ரூபாய் மற்றும் 330.38 ரூபாய் ஆக மாறாமல் உள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315. 70 ரூபாய் முதல் 314.73 ரூபாயாக குறைவடைந்துள்ளதுடன், விற்பனைப் பெறுமதி 328 ரூபாயாக மாறாமல் உள்ளது.
சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 317 ரூபாய் மற்றும் 328 ரூபாய் ஆக மாறாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
