டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் அவரது மகன்களுக்கும் நீதிமன்றம் விதித்துள்ள அபராதம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு நியூயோர்க் நீதிமன்றம் 354 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

காணி மோசடி வழக்கொன்றிலேயே டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் நியூயோர்க்கில் மூன்று ஆண்டுகளுக்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளான டொனால்ட் ட்ரம்ப்பின் மகன்கள் இருவருக்கும் தலா 4 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்கள் இருவருக்கும் நியூயோர்க்கில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும்  டொனால்ட் ட்ரம்ப்பின் வணிக உரிமங்கள் ரத்து செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.