
டேவிட் மாலன் ஓய்வை அறிவித்தார்
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் டேவிட் மாலன் , தனது 37ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும், சதம் அடித்த இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டதன் பின்னர் தனது முடிவை உறுதிப்படுத்தியுள்ளார்.
மாலன் 22 டெஸ்ட் போட்டிகளில் 1,074 ஓட்டங்களையும், 30 ஒருநாள் போட்டிகளில் 1,450 ஓட்டங்களையும் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் 1,892 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
