டேன் பிரியசாத் படுகொலை சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி கைது

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் பெண் ஒருவர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை – ரங்கல பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்