
டேன் பிரியசாத் கொலை: உறவினர்களால் கொலை செய்யப்பட்டாரா?
அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களுக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் கொலன்னாவை நகரசபை வேட்பாளரான டேன் பிரியசாத் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு கொலன்னாவ சாந்தமுல்ல பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் வைத்து துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கானார்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.
இது தனிப்பட்ட தகறாறு காரணமாக இடம்பெற்ற கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை 2022ஆம் திகதி ஜூலை 26ஆம் திகதி டேன் பிரியசாத் சகோததரரான திலின பிரியசாத் கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
காரில் ஹெல்மட் அணிந்து வந்த இருவர் ஒருகுடுவத்த மேம்பாலத்திற்கு அருகில் கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்திருந்தனர்.
உயிரிழந்த டேன் பிரியசாத்தின் சகோதரர் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்பு பட்டிருந்ததாக தகவல் வெளியானது. மேலும் அவரது கொலையுடன் தொடர்புடையவர்கள் என டேன் பிரியசாத்தின் உறவினர்கள் மீது சந்தேகம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இவ்வாறு சந்தேகிக்கப்பட்ட உறவினர்களின் முச்சக்கர வண்டி மீது டேன் பிரியசாத் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்குதல் மேற்கொண்டதாக தகவல் வெளிவந்தது.
இதேவேளை டேன் பிரியசாத் கொலை செய்யப்பட்டதன் பின்னர் குறித்த உறவினர் தரப்பை சேர்ந்த தந்தை மகன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய கொழும்பு நிதவான் நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் வெளிநாட்டு பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை இன்று காலை டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்