டேட்டிங் வரவேண்டும் என்றால் பெண்ணின் நிபந்தனை : இணையவாசிகள் அதிர்ச்சி

காதலிப்பதற்கு ஆண்/பெண் கிடைப்பது கஷ்டம், திருமணம் அதைவிட கஷ்டம் என்றால் இந்த இரண்டுக்கும் முதல் கட்டமான டேட்டிங் செல்வதற்கு கூட சரியானவர் கிடைப்பது, ஏற்ற துணை கிடைப்பது மிக மிகக் கடினமானது தான். ஒவ்வொரு நபருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது; தனக்கு பொருத்தமான ஒரு வாழ்க்கை துணையை தேடிக் கண்டுபிடிப்பது என்பது உலகத்தின் மிக சவாலான விஷயமாக மாறியிருக்கிறது என்று கூறலாம். டேட்டிங் செல்வது பற்றி ஒரு சம்பவம்தான் வைரலாகப் பரவி வருகிறது.

தன்னை டேட் செய்ய விரும்பும் எந்த ஆணும் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு பெண் பல நிபந்தனைகளை விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை முழுவதுமாக எந்த நபரால் செய்ய முடியுமோ அவரை மட்டும் தான் தேர்வு செய்வேன் என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

ஜூலி என்ற பெண், முகபுத்தகத்தில் தன்னுடைய டேட்டிங் விருப்பங்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ‘என்னை டேட் செய்வதற்கு நீங்கள் அழைக்கும் முன்பு சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதில் நான் லஞ்ச் அல்லது டின்னர் டேட்டுக்கு மட்டும் தான் வருவேன். அதுமட்டும் இல்லாமல் அது என்னுடைய ஷெட்யூளுக்கு பொருந்தி வர வேண்டும். இதையும் மீறி நீங்கள் பின்வருவனவற்றையெல்லாம் எனக்கு வழங்கினால் தான் டேட்டிங்கிற்கு வருவேன்’ என்று பெரிய பட்டியல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

அவர் பகிர்ந்த பட்டியலில் பின்வருமாறு:

ரூ.15500 மதிப்புள்ள கேஸ்/பெட்ரோல், ஏனென்றால் டேட்டிங் செல்லும் ஆணின் வாகனத்தை நம்பமாட்டேன் என்று கூறியுள்ளார். கிட்டத்தட்ட ரூ. 31000 வரை மதிப்புள்ள பேபி சிட்டர் அல்லது இரண்டு உணவுகளுக்கான தொகை ஷாப்பிங் செல்வதற்காக ரூ 32000 டேட்டிங் செல்ல புதிய ஆடை வாங்குவதற்கு ரூ.32000 பெடிக்யூர் செய்ய ரூ.32000  நகங்கள் எப்போதுமே அழகா பராமரிக்கிறாராம்.

இந்த மொத்த தொகையும் தன்னை டேட்டிங் செய்ய விரும்பும் ஆண் தான் செலவு செய்ய வேண்டும், அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், மற்றொரு நிபந்தனையும் கூறியுள்ளார். முதல் டேட்டிங் சென்ற உடனேயே பாலியல் உறவை வைத்துக் கொள்ளமாட்டார் என்பதையும், உணவகத்தில் சர்வருக்கு எந்த அளவுக்கு டிப் கொடுக்கிறார் என்பதன் அடிப்படையிலும் இரண்டாவது டேட்டிங்கிற்கு ஒப்புக் கொள்வார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு டிஸ்க்ளைமர் போல இன்னொரு அறிக்கையையும் அவர் கொடுத்துள்ளார். ‘இதை பார்ப்பவர்களுக்கு நான் அதிகமாக டிமான்ட் செய்வது போல தெரியும். ஆனால் நான் இதையெல்லாம் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறேன், என்னுடைய வாழ்க்கைமுறை இதுதான்’ என்பதை வலியுறுத்தியுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையவாசிகள் இடையே பேசுப்பொருளாகியுள்ளது.