டேட்டிங் செல்வதற்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை

தாய்லாந்தைச் சேர்ந்த ஒயிட்லைன் குரூப் என்ற மார்கெட்டிங் நிறுவனம் ஒன்று தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்காக சம்பளத்துடன் கூடிய விடுமுறை (Tinder Leave) வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாதங்களுக்கு இந்த டிண்டர் விடுப்பைப் பயன்படுத்தி ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் கூறியதை அடுத்து அந்நிறுவனம் இந்த முடிவை அறிவித்துள்ளது. காதல் செய்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும், இது உற்பத்தியை அதிகரிக்க உதவும் என அந்நிறுவனம் நம்புகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்