டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் பெதும் நிஸ்ஸங்க

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதன்படி குறித்த ஏலத்தில் பெதும் நிஸ்ஸங்கவை டெல்லி கெப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.

இதற்கமைய டெல்லி கெப்பிடல்ஸ் அணி பெதும் நிஸ்ஸங்கவை 4 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது.

இந்த ஆண்டுக்கான ஏலத்தில் 12 இலங்கை வீரர்கள் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.