டெல்லி கெபிட்டல்ஸ் மகளிர் அணி வெற்றி

மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 10 ஆவது போட்டியில் டெல்லி கெபிட்டல்ஸ் மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

குறித்த போட்டியில் டெல்லி கெபிட்டல்ஸ் மகளிர் மற்றும் குஜராத் ஜயன்ட்ஸ் மகளிர் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிட்டல்ஸ் மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயன்ட்ஸ் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

128 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிட்டல்ஸ் மகளிர் அணி 15.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24